ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பௌசி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இயலும் ஸ்ரீலங்கா ஒன்றிணைவு நிகழ்வில் பங்கேற்று அவர்கள் ஜனாதிபதிக்கான ஆதரவை உறுதிப்படுத்தினர். உடன்படிக்கையிலும் கைப்பற்றினர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கடந்த பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ராஜித, வெல்கம ஆகியோர் வெற்றிபெற்றிருந்தனர். அவர்கள் இருவரும் தற்போது ரணிலுடன் இணைந்துள்ளனர்.










