ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்டவுன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள 04 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த சந்திரபோஸ் சத்தியபாபு (37 வயது) என்ற குடும்பஸ்தர் நேற்று (16) மாலை வேளையில் தனது குடியிருப்பிற்கு சுமார் 300 மீற்றர் தூரத்தில் இரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி வீழ்ந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் 1990 நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முனைந்து அவரை பரிசோதித்த நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்து ஹாலிஎல பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவரது மரணம் கொலையாக இருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பசறை நிருபர்