உள்ளுராட்சிசபைத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் தனித்து சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.
குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது.
வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக இம்முறையே காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்று கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார். வேட்பு மனுவும் இறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகரசபைக்கு போட்டியிடவுள்ள வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.