குருநாகல் மாநகரைசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடு அறுப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநரசபை அமர்வில் இந்த தீர்மானம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. மாநகர முதல்வர் துஷாரசன்ஜீவ தலைமையில் நடந்த அமர்வில்,இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த அமர்வில்,மாநகர சபையிலுள்ள 21 உறுப்பினர்களில் 18 பேர் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாநகர சபை உறுப்பினர் அஸார்தீன்மொய்தீன் இதற்கான பிரேரணையை கொண்டு வந்தார்.பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் நலன் கருதி, மாடு அறுப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்ற கருத்தையும் சபை அமர்வின்போது அவர், தெளிவுபடுத்தினார்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர், இனவாத நோக்கி்ல் மாடறுப்பதற்கு இப்பிரதேசத்தில் தடைவிதிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.