நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. புதிய கட்டணப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 17 ரூபாவாக இருந்துவந்த ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 870 ரூபாவாக இருந்த பஸ் கட்டணம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகக் கூடுதலான பஸ் கட்டணமாக ஆயிரத்து 498 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆட்டோ மற்றும் பாடசாலை வேன் சேவை ஆகியவற்றின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.


