” குற்றப் பிரேரணை வந்தால், அந்த சவாலை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.” – என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஜனக்க ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
” என்னை நீக்க குற்றப்பிரேரணை தேவையில்லை. உரிய குற்றச்சாட்டு இருந்தாலே போதும். முதலில் அமைச்சர் இதை செய்யட்டும். குற்றப் பிரேரணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.” – எனவும் ஜனக்க குறிப்பிட்டார்.
