தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலி ரூட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விறகு வெட்டுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர்களை குளவிக்கொட்டியுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரதேச மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுமார் 75 வயதுடைய முதியவர் ஒருவர் மரணித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மரணித்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டுள்ள மற்ற நபர் லிந்துலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிருபர் – கௌசி,










