புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்துவிட்டார் எனவும் தெரியவருகின்றது.
புசல்லாவை, பிளக்போரஸ்ட் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்காகி, 8 வயது சிறுவன் ஒருவர் பலியானார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புசல்லாவை பகுதியில் குளவிக்கொட்டால் இரண்டாவது உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.