நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரஸ் பிரிவில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திருப்புகையில் 12 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 மாணவர்களும், 9 மாணவிகளும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் 13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
