எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
4 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிகூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து, அப்பகுதியில் இருந்தவர்களை கொட்டியுள்ளன.