குழந்தை விற்பனை – இடைத்தரகர் கைது!

பிறந்து ஏழு நாட்களேயான ஆண் குழந்தையை 50,000 ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு விற்றதாக கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையை விலை கொடுத்து வாங்கிய பெண் மற்றும் இடைத்தரகராக செயற்பட்ட நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகராக செயற்பட்ட கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் அநுராதபுரம் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டதுடன் குழந்தை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles