ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இரவு – பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு தொடர்ந்தும் முகாமிட்டு, நாட்டை மீட்பதற்காக அவர்கள் போராடிவருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கு பல தரப்பினரும் உணவு பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர்.
போராட்ட வளாகத்தில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதிக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நாட்டில் சில இடங்களில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.