பதுளை சேனாநாயக சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதுடைய இலக்கம் 95,பம்பஹின்ன,பெலிஹுல்ஒய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பனகேகின்ன கினிகங்கல , ஹல்தமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










