கேகாலையில் பஸ் விபத்து – 15 பேர் காயம்!

கேகாலை, அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை இரு பஸ்கள்  மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் , எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும்  மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நால்வர் படுகாயமடைந்துள்ளனர், 11பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி புறப்பட்ட பஸ், லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர். லொறியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

( அவிசாவளை நிருபர் நிருபர்)

Related Articles

Latest Articles