நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குல்ஓய, மாவட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தில் தலை மன்னார் பொலிஸ் பிரிவில் இரு கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த பொலிஸ் பிரிவில் ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவில் பிம்புருவத்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.











