கேகாலை மாவட்டத்தில் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இகுல்ஓய, மஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்கொட கிராம சேவகர் பிரிவில் டென்ஸ்வர்த் தோட்டமும் , கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமட கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாஹேன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.










