நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி நகர பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் நேற்று (18) மாலை நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு, இவர்களிடமிருந்து 34,500 ரூபாய் பணத்தொகையும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
க.கிசாந்தன்