‘கேஸ்’ விலை குறைப்பு – புதிய விலைப்பட்டியல் அறிவிப்பு!

12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலையாக 4 ஆயிரத்து 409 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக ஆயிரத்து 770 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு ,புதிய விலையாக 822 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

எனினும், லாப் கேஸ் நிறுவனம் இன்னும் விலை குறைப்பு செய்யவில்லை.

Related Articles

Latest Articles