கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரவி செனவிரத்னவை கஸ்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் இன்று (29) ஆஜர்படுத்திய போது, ​​அவரை நவம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் மெரீன் டிரைவ் வீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று (28) இரவு இவர் கைது செய்யப்பட்டார்.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார், பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles