‘கொடும்பாவி எரிப்பு’ – ரணில், பிரபாகரனை முந்திய மஹிந்தானந்த

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைவிடவும், என்மீதே தற்போது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுவருகின்றன – என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

செயற்கை உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். என்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். போராட்டங்களில் எனது உருவ பொம்மைகளை எரித்தனர்.

பிரபாகரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் உருவ பொம்மைகள் கூட, மக்கள் இந்தளவு எரித்திருக்கமாட்டார்கள். அப்படி இருந்தும் பசுமை விவசாயம் தொடர்பான கொள்கை சிறப்பு என்பதால்தான் அந்த கொள்கையில் உறுதியாக இருந்தேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles