கொட்டகலையில் ஆன்மீக எழுச்சி பேரணி…!

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 8.30 மணிக்கு கொட்டகலை ரிசிகசி கலாசர மண்டபத்தில் ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வை முன்னிட்டு கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகாமையில் அறநெறி மாணவர்கள் மற்றும் சமய தலைவர்கள் அரசியல் சமூக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட ஊர்வலம் மிக சிறப்பாக நடைபெற்றது.

அதில் அறநெறி மாணவர்களின் பாரம்பரிய இசையான தப்பு கோலாட்டம், கரகாட்டம், காவடி உள்ளிடட பல கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாரத தேசத்தின் தமிழ் நாடு திருகைலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் திருமுறைக் கலாநிதி ஸ்ரீலஸ்ரீ சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆசி உரையும் இடம்பெற்றது.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles