திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில் இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்திருட்டு சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 70000 ரூபாய் பணமும் திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
திருடன் கடைகளில் முன்புறத்தில் உள்ள இரும்பு கதவு போன்றன உடைத்து முன் வழியாக கடைக்கு நுழைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு, நுவரெலியா மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.