இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று (31 )கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்தின் அனுசரணையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, மகளிர் பிரிவு அமைப்பாளர்கள், பிரதேச சபை பெண் உறுப்பினர்கள், பணிமனை பெண் உறுப்பினர்கள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்நிகழ்விற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மற்றும் நிதிச் செயலாளர் மருதப்பாண்டி இராமேஸ்வரன், உப தலைவர் பரத் அருள்சாமி உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.