கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் எனவும், தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரியொருவர் கூறினார்.
இன்று வெளியான பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் ஏழு பேருக்கும் , மௌன்ட்வேணன் 01,எரின்டன் கொலனி 01, தர்மபுரம் 01, போகாவத்தை 01, தெவிசிறிபுர 01, ரொசிட்டா தோட்டம் 01, லொப்கில் 01, கொத்தமல்லி தோட்டம் 02 பேருமாக மொத்தம் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
