கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் நேற்று (22) 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் – 19 தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்றாளயர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
