கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
70 பேருக்கு கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதிலேயே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
கொட்டகலை வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.










