கொட்டகலை பகுதியில் போதைக்கு முற்றுப்புள்ளி – புஸ்பா விஸ்வநாதன் சபதம்

கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்  இவ்விடயம் சம்பந்தமாக கொட்டகலை வர்த்தக சங்கம் பத்தனை பொலிஸ் நிலையம் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் தீவிரம் அடையாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முதல் கட்டமாக கடந்த மாதம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் என பல அமைப்புகளை ஒன்றிணைத்து நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பங்கு பற்றுதலுடன் ஆலோசணை கூட்டமொன்றை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நடத்தியது.

அந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கடந்த வாரம் 14ம் திகதி நுவரெலியா அதிபயங்கர மருந்து பொருட்கள் கட்டுபாட்டு சபை அதிகாரிகளால் திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட்ட 18 பாடசலைகள்  ஆசிரியர்களுக்கும் சிவில் சமூக செற்பாட்டாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கொட்டகலை வர்த்தக சங்கம் 14 பெயரை கொண்ட குழு நியமிக்கப்பட்டது.அக்குழுவானது பாடசாலை மட்டத்திலும் வெளியிடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பாவனையாளர்களை இழக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.அக்குழுவில் ஓய்வு பெற்ற உதவி பணிப்பாளரான இ.லோகநாதன்,  வடிவேலு, ஓய்வு பெற்ற கேம்ரிச் கல்லூரியின் அதிபரான சி.ஞானபிரகாசம்,ஓய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எஸ்.ஜெயகுமார்,வர்த்தக சங்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஆர்.கருப்பையா , டீ.எம்.சொக்கலிங்கம்,பூவலிங்கம்,இன்னும் பல சமூக ஆர்வாளர்களும், ஒருங்கமைப்பு நடவடிக்கைகு டீ.தவராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொட்டகலை பகுதியி இவ்வாறான போதைப்பொருள் பாவனையை தடுக்க அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles