கொட்டகலை மாணவனுக்கு இன்றைய தினம் கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி!

இன்று நடைபெறவுள்ள  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு  கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுகயீனம் உற்ற நிலையில் பரீட்சைக்காக  நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நாளை  இவ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்துள்ளது.

ஆனால் இம்மாணவனுக்கு மீண்டும் கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு பிரயாணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு பொருத்தமான சூழ்நிலை நிலை காணப்படாத நிலை பற்றி வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் தாய் ஆகியோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா அவர்களிடம் விடயத்தை கூறினர்.

அவர் உடனடியாக பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டதற்கும் தேவையான சகல ஆவணங்களும் அவருக்கு புலணம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் அமைவாக பரீட்சை ஆணையாளர் திருமதி.ஜீவராணி புனிதா அம்மையார் குறித்த மாணவன் இன்றைய தினம்  தற்காலிகமாக வசிக்கும் தமது உறவினர் வீட்டுக்கு  அருகிலுள்ள கொழும்பு இசிப்பத்தான வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

– ரா.கவிஷான் –

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles