‘கொரோனா அச்சம்’ – நுவரெலியாவில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை!

கொரோனா அச்சம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை உடன் நிறுத்துமாறு நுவரெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு உல்லாசப்பயணிகள் அதிகமாகவரும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா கிரகரி வாவியில் நடைபெறும் படகுசேவை மற்றும் வாவிக்கரையில் நடத்தப்பட்டுவந்த குதிரை சவாரி, காணிவேல் களிநாட்ட நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles