இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.