நாட்டில் இன்னமும் கொரோனா சமூகத் தொற்று நிலைமை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்றுப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
மினுவாங்கொட கொத்தணிபரவலையடுத்து ஒரு லட்சம் பேருக்கு மேல் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.” – என்றார்.