கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார்.
இராணுவத்தளபதி சுரேந்திர சில்வா மிகவும் நேர்மையானவர் .அவர் கொவிட் -19 தட்டை தடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இருந்தாலும் கொவிட்-19 அவரால் தடுக்க முடியவில்லை. போர் செய்வது போல கொவிட்-19 தொற்றை ஒழிக்க முடியாது.
இது சுகாதார விதிகளை கட்டுப்படுத்தும் பிரச்சனை.ஆகையால் ஊழஎனை-19 தொற்றை இல்லாதொழிக்க அதற்கு உகந்த சுகாதார உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் பச்ச ட்தில் தான் இவ்வாறான தொற்றை இல்லாதொழிக்க முடியும்.
தற்போது நாட்டில் பல்வேறு வகையான உழஎனை-19 தொற்றுகள் உருவாகியுள்ளன. இதற்கு முழுமையான காரணம் சுகாதார முறைகளைபின்பற்றாதால் ஏற்பட்ட விலைவும் தான்தோன்றித்தனமாக நடத்தியதுமாகும்.
இராணுவத்தினர் நாட்டை பாதுகாக்க பணியாக்ற்றுபவர்கள் அவர்கள் யுத்த பயிற்சி பெற்றவர்கள். அவர்களை சுகாதார சேவைகளில் ஈடுபடுத்தாமல் நாட்டில் உள்ள அனைத்து சுகாதார உயர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போது தான் நாட்டில் கொவிட் தொற்றை இல்லாது ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தனது கருத்தை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.