இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆணொருவரே, மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.