‘கொழும்பிலிருந்து கதிர்காமம்சென்ற 120 பேர் சிக்கினர்’ – தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த 120 பேரை , கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், 06-11-2020 இன்று தொடக்கம் தொடர்ந்து வரும் 14 தினங்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த மேற்படி 120 பேரும், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்சமன் திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு எவ்வகையில் இந்த 120 பேரும் சுற்றுலா வந்தார்களென்றும் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காமம் வந்த சுற்றுலா வாசிகள் குறித்து கதிர்காமம் பொது சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல்களையடுத்தே பொதுசுகாதாரப்
பிரிவினர் விரைந்து, அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுரூபவ் அவர்களை அவரவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தினர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles