கொழும்பிலும் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு கட்சி!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று செலுத்தியது.

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினராலேயே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மொட்டு கட்சி செயலாளர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், களுத்துறை மாவட்ட வேட்பாளர் பட்டியலும் இன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles