கொழும்பு பல்கலைக்கழக வளாகம் உட்பட கொழும்பில் முக்கிய சில இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இரகசிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரமே பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் இணைந்தே கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும் அது ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியா அல்லது போராட்டமா என்பது உட்பட உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
