கொழும்பு, ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாகவும் எனினும் விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
