கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது Celebrity Edge

Celebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

நவம்பர் 13 ஆம் திகதி டுபாயில் இருந்து புறப்பட்ட கப்பல் நவம்பர் 16 ஆம் திகதி மும்பையை சென்றடைந்துள்ளது.

இலங்கை வந்துள்ள இந்தக் கப்பல் பின்னர் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles