கொவிட்-19 நோய்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கியமை தொடர்பில் அரசிற்கு நன்றி தெரிவிக்கும் APHNH

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கொவிட்-19 நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் பிரிவு சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்குவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது வரவேற்பை தனியார் மருத்துவமனை மற்றும் பராமரிப்பு நிலைய சங்கம் (APHNH) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களுக்குள் ஒருதொகை தடுப்பு மருந்துகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கும் APHNH சுகாதார ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் போன்ற தனியார் பிரிவுகளிலுள்ள அனைவருக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாட்டை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமென சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த APHNHஇன் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ், “கொவிட்-19 தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு தனியார் பிரிவிலுள்ள மருத்துவ ஊழியர்களையும் உள்ளடக்கியமை குறித்து சுகாதார அமைச்சிற்கும் மற்றும் முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் தொற்றுநோய் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் அரசாங்க அமைச்சர்களுக்கான சங்கம் என்ற வகையில் எமது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் முன் வரிசையிலுள்ள சுகாதார ஊழியர்களுக்காக தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொடுப்பது குறித்து அரச அதிகாரிகளுக்கு APHNH தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளது. என்றபோதிலும் தனியார் பிரிவிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது முழுமையான தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்கவிலையெனவும் நாட்டிற்கான அதிகமான தடுப்பு மருந்து தொகையொன்று மிக விரைவில் தமக்கு வழங்கப்படுமெனவும் சங்கம் எதிர்பார்த்துள்ளது.

“எமது ஊழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடாமை குறித்து நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன், இந்த தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளின் ஊடாக முழுமைப்படுத்த முடிவது தனியார் பிரிவிலுள்ள குறிப்பிடத்தக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவையிலுள்ள ஒரு பிரிவினர் மாத்திரமே என நாம் புரிந்து கொண்டோம்.

மிக விரைவில் தடுப்பு மருந்து ஒரு தொகை நாட்டிற்கு கிடைத்தவுடன் இந்த வேலைத்திட்டத்தினை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட தனியார் பிரிவிலுள்ள ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அதனை விஸ்தரிக்க முடியுமென நம்புகின்றேன்.

சுகாதார பிரிவிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் முன் வரிசையிலுள்ள சுகாதார ஊழியர்களைப் போலவே கருதுவோம்.” என கலாநிதி பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் பிரதிபலிப்பின் போது தனியார் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் காரணமாக அவர்களது சுகாதார ஊழியர்களும் இந்த வைரஸிற்கு அதிகமாக பாதிக்கப்பட்டதுடன் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட இவ்வாறான தீர்மானம் காலத்திற்கு ஏற்றதாகும்.

தொற்றுநோய்க்கு மத்தியில் நோயாளர்களுக்கு உரிய நேரத்தில் சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுத்ததற்கு மேலதிகமாக கொவிட்-19 காரணமாக தேசிய சுகாதார கட்டமைப்பிற்கு சுமத்தப்பட்ட பாரத்தை குறைப்பதற்காகவும் தனியார் பிரிவினால் இடைப்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தின் நிர்வகிப்பு செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தனியார் பிரிவு தயாராக இருப்பதாக கலாநிதி பீரிஸ் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்திய நிலையங்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் கொவிட்-19 தடுப்பு மருந்து மத்திய நிலையங்களாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தால் இந்த வேலைத்திட்டம் மிகவும் விஸ்தரிப்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியுமென APHNH குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles