கோட்டாவின் அறிக்கையில் ‘தமிழ்க் கொலை’ – வலுக்கிறது கண்டனம்!

இருந்து தூக்கியெறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள தமிழ்ப் பிழை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையிலேயே தமிழ் பிழை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச என எழுதப்பட வேண்டிய பெயரானது “குா்டுடுபுா்யு ருா்ஜபுகு்ஷ” என எழுதப்பட்டுள்ளது.

முன்னதாக அறிக்கை வெளியான பின்னர் பலரும் இந்த விடயத்தை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்ட நிலையில், தற்போது இந்த விடயம் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

ஒரு முன்னாள் ஜனாதிபதியின் கடிதத் தலைப்பில் அவரது பெயர்  பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூட ஒரு தமிழர் அவர் அருகில் இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ்வாறெனின், இலங்கையின் முன்னாள் தலைவராக, அவர் எவ்வாறு, தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் விடயம் சார்ந்து அவர் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விடயமானது சாதாரணமாக சிரித்துவிட்டு கடந்துபோகும் விடயமல்ல எனவும், மாறாக தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதுமான அவரது பொறுப்பற்ற அல்லது அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக குறித்த செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தமிழில் பெயரை சரியாக குறிப்பிடாமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பாக தாம் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளையும் பெறும் கோட்டாபய ராஜபக்ச, இந்த தவறை கட்டாயம் சரி செய்ய வேண்டும் எனவும் அநுருத்த பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles