ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியை கட்டி எழுப்ப வேண்டிய நேரம் இதுவல்ல என்றும் பொது மக்களின் போராட்டத்தை சுற்றி மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் மே தினத்தன்று காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து மே தினத்தை அனுஷ்டிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“கோட்டாகோகம” இளைஞர் போராட்டம் அரசியல் கட்சிக்கு சம்பந்தப்பட்டதல்ல என்பதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.