தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.
கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, தயாசிறி ஜயசேகர, சாணக்கியன் , ஹேசாவிதாகனே, மரிக்கார், சரித ஹேரத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையிலேயே அநுரவும், துமிந்த திஸாநாயக்கவும் இன்று இராஜினாமா செய்துள்ளனர்.
