‘கோப் ‘எனப்படுகின்றது பொது நிறுவனங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் முதலாவது கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இதன்போதே தலைமைப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவியை எதிரணி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










