கோப் குழுவில் இருந்து மேலும் 3 எம்.பிக்கள் இராஜினாமா!

கோப் குழுவில் இருந்து மேலும் சில எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் சரித ஹேரத் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எராக் விக்கிரமரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

 

 

Related Articles

Latest Articles