ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பதுளை நகரில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் நடைபவணியாக பதுளை வைத்தியசாலை வரை சென்று மீண்டும் பதுளை நகர் வரை வந்து மக்களும், வர்த்தகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதுளை நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
அத்துடன், அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து , அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ராமு தனராஜா
