சஜித்திடம் சரணடைவாரா தயாசிறி ஜயசேகர?

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை பெற்று அக்கட்சியுடன் தான் இணையப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைநிறுத்தியுள்ளது. அத்துடன், மாவட்ட தலைவர், அமைப்பாளர் பதவி என்பனவும் பறிக்கப்பட்டுள்ளன.

எனினும், தான் சுதந்திரக்கட்சியை விட்டு வேறு எங்கும் போகப்போவதில்லை என தயாசிறி ஜயசேகர அறிவித்துவருகின்றார்.

இந்நிலையில் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று சஜித்துடன் இணைந்தார். எனவே, தயாசிறியும் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையும் அரசியல் கூட்டணியில் ஒரு பங்காளியாக தயாசிறி இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles