எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று 14 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் சம்பிக்க, ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவார் எனவும், அதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் சம்பிக்க ரணவக்க, சஜித்துக்கு ஆதரவளித்தார், எனினும், பொதுத்தேர்தலின் பின்னர் சஜித்துடனான அரசியல் உறவை முறித்துக்கொண்டார். இந்நிலையிலேயே இருவரும் மீண்டும் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.