எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா கடுமையாக திட்டியுள்ளாராம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது மாநாடு கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் தவிசாளர் பொன்சேகாவுக்கு இறுதி இடம் வழங்கப்பட்டுள்ளது.
பொன்சேகா உரையாற்ற சென்றவேளை, மைதானத்தில் ஆரம்பத்தில் இருந்த மக்கள் கூட்டம் இருக்கவில்லை. இதனால் கடுப்பான அவர், “ வெத்து கதிரைகளை பார்த்து பேசுவதற்கு நான் தயாரில்லை, எல்லா கட்சிகளிலும் ஊழல் வாதிகள் உள்ளனர். 15 வீதமான நல்லவர்களும் , அனுபவம், அற்றல் உள்ளவர்களும் இருக்கின்றனர். அவர்களை இணைத்து ஆட்சி அமைக்கப்படும்.” எனக் கூறிவிட்டு விடைபெற்றார்.
அத்துடன் நின்றுவிடவில்லை, “ ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்த தெரியாத நீர், இப்படி நாட்டை ஆள்வாய்” என எதிர்க்கட்சி தலைவரிடம் வந்து, கடுந்தொனியில் குறிப்பிட்டுவிட்டு பொன்சேகா புறப்பட்டு சென்றாராம்.
குறித்த மாநாட்டில் ராஜிதவுக்கு உரையாற்றுவதற்கு இடமளிக்கப்படவில்லை. அவர் ஆளுங்கட்சி பக்கம் செல்வது உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சு பதவியும் தயார் நிலையில் இருக்கின்றதாம்.










