” ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்காலம் கிடையாது. எனவே, அக்கட்சியில் உள்ளவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும்.” – என்று ஐ.தே.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
” ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலரை ரணில் விக்கிரமசிங்கதான் அரசியலுக்கு கொண்டுவந்தார். அரசியலில் அவர்களுக்கு ‘அ’ கற்பித்த அரசியல் குரு அவராவார். எனவே, இணைந்து செயற்படுபதில் பிரச்சினை கிடையாது. இணைந்து பயணித்தால்தான் நாட்டை மீட்டெடுக்க முடியும்.
எதிரணி உறுப்பினர்களை நாம் விலைக்கு வாங்க முற்படவில்லை. எதிர்க்கட்சி தலைவரிடம் தகவல் இருந்தால் அது தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிடலாம்.” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
