சஜித் அணிக்குள் மோதல்! 5 ஆக உடையுமா ஐக்கிய மக்கள் சக்தி?

ஐக்கிய மக்கள் சக்தியின் 53 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐந்து அணிகளாக பிரிந்து செயற்படுவதால் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் அரசியல் குழுவால் எடுக்கப்படும் தீர்மானங்களின் பிரகாரம் செயற்படாமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தலைமைத்துவம்மீதான அதிருப்தி காரணமாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கட்சி செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை எனக் கூறப்படுகின்றது.

பதுளை மாவட்ட தலைமைத்துவம் தொடர்பில் சமிந்த விஜேசிறி, சமரவீர ஆகியொருக்கும், இரத்தினபுரி மாவட்ட தலைமைத்துவம் தொடர்பில் ஹேஷா விதானகேவுக்கும், தலதா அத்துகோரலவுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சம்பிக்க ரணவக்க 43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தை செயற்பட்டுதிவருகின்றார். இவருடன் சில எம்.பிக்கள் செயற்பட்டுவருகின்றனர்.

மேலும் சில எம்.பிக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேச்சு நடத்திவருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தனிவழி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles